மாவட்ட செய்திகள்

பட்னாவிஸ் கிண்டல் அடித்த விவகாரம்: ‘3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது’ உத்தவ் தாக்கரே பதிலடி + "||" + PatnaVis teased affair: The 3 wheeler state is functioning properly Uthav Thackeray retaliates

பட்னாவிஸ் கிண்டல் அடித்த விவகாரம்: ‘3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது’ உத்தவ் தாக்கரே பதிலடி

பட்னாவிஸ் கிண்டல் அடித்த விவகாரம்: ‘3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது’ உத்தவ் தாக்கரே பதிலடி
தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் அடித்தது குறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மராட்டியத்தில் 3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது என பதிலடி கொடுத்தார்.
மும்பை,

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பாரதீய ஜனதா உடனான உறவை உதறிய சிவசேனா, கொள்கையில் வேறுபட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனால் பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

கருத்தியலில் வேறுப்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசை 3 சக்கர வாகனத்துடன் ஒப்பிட்டு அந்த கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது என பாரதீய ஜனதா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கேலி செய்து இருந்தார்.

தேவேந்திர பட்னாவிசின் இந்த விமர்சனத்துக்கு தற்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதில் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த அரசாங்கம் மூன்று சக்கர வண்டி போன்றது என்று நாங்கள் விமர்சிக்கப்பட்டோம். எங்கள் அரசாங்கம் ஒரு மூன்று சக்கர வண்டி என்பது சரி தான். ஆனால் அதைவிட முக்கியமானது என்னவென்றால் அது சரியாக இயங்குகிறதா என்பது தான்.

சவாரி செய்யும் போது ஒரு வாகனத்தின் சமநிலை மிக முக்கியமானது. அந்த வகையில் எங்களது அரசாங்கம் சரியாக இயங்கி கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலை பாதுகாப்பை வாழ்நாள் பணியாக கடைபிடிக்க வேண்டும்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
சாலை பாதுகாப்பை வாழ்நாள் பணியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.
2. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பாராட்டு விழா; சிவசேனா சார்பில் 23-ந் தேதி நடக்கிறது
சிவசேனா சார்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு வருகிற 23-ந் தேதி மும்பையில் பாராட்டு விழா நடக்கிறது.
3. பால்தாக்கரே நினைவு சின்னத்துக்காக அவுரங்காபாத் பூங்காவில் ஒரு மரம் கூட வெட்டப்படாது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
அவுரங்காபாத்தில் உள்ள பிரியதர்ஷினி பூங்காவில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது.
4. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை: மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவுப்படுத்துகிறது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை நினைவுப்படுத்துவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
5. உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரி சபையில் 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு
உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரி சபையில் 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.