மாவட்ட செய்திகள்

அரசியல் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் அனுமதிக்க கூடாதுமாநில அரசு அதிரடி உத்தரவு + "||" + Political programs should not be allowed in schools State Government Action Directive

அரசியல் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் அனுமதிக்க கூடாதுமாநில அரசு அதிரடி உத்தரவு

அரசியல் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் அனுமதிக்க கூடாதுமாநில அரசு அதிரடி உத்தரவு
அரசியல் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் அனுமதிக்க கூடாது என்று மராட்டிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மும்பை, 

அரசியல் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் அனுமதிக்க கூடாது என்று மராட்டிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

குடியுரிமை சட்ட விழிப்புணர்வு

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மும்பையில் உள்ள தயானந்த் என்ற தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு அந்த சட்டம் குறித்து பாரதீய ஜனதா சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மராட்டிய பள்ளிக் கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் மாநில அரசு விளக்கம் கேட்டு அந்த பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

இந்தநிலையில், பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது என்று பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், அரசியல் நிகழ்ச்சிகளில் இருந்து மாணவர்கள் ஒதுங்கியிருப்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மாநில பள்ளிக்கல்வித் துறையின் இந்த நடவடிக்கையை பாரதீய ஜனதா விமர்சித்து உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித் துறை மந்திரி ஆஷிஸ் செலார் கூறுகையில், மராட்டிய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது, என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...