மாவட்ட செய்திகள்

கள்ளச்சந்தையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.14 கோடி முக கவசங்கள் பறிமுதல் + "||" + Hid for sale in black market Rs 14 crore face shields seized

கள்ளச்சந்தையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.14 கோடி முக கவசங்கள் பறிமுதல்

கள்ளச்சந்தையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.14 கோடி முக கவசங்கள் பறிமுதல்
கள்ளச்சந்தையில் விற்க பதுக்கிவைக்கப்பட்டு இருந்த ரூ.14 கோடி முக கவசங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மும்பை, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் கடைகளில் முக கவசங்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். உள்துறை மந்திரி அனில்தேஷ் முக் கூட கடந்த 2 நாட்களுக்கு முன் கடைகளில் முக கவசங்கள் கிடைப்பதில்லை என கூறியிருந்தார்.

இந்தநிலையில் மும்பை, சகார் கார்கோ பகுதியில் முககவசங்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்குள்ள குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 25 லட்சம் முக கவசங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.14 கோடி ஆகும். இதையடுத்து போலீசார் முக கவசங்களை பதுக்கி வைத்திருந்ததாக 4 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க இந்த முக கவசங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசங்கள்
இரும்பேடு ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டன.
2. நாகை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.10 லட்சம் செல்போன்கள் பறிமுதல்
நாகை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். உரியவர்களிடம், செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.
3. நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்
நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
4. திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் சிக்கிய புதுக்கோட்டையை சேர்ந்தவர் உள்பட 2 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு
பெங்களூருவில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்ய சென்றபோது போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.