மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களுக்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கும்? - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விளக்கம் + "||" + What products are available to the public during the curfew? - First-Minister Uthav Thackeray's explanation

ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களுக்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கும்? - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விளக்கம்

ஊரடங்கு உத்தரவின் போது  பொதுமக்களுக்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கும்? - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விளக்கம்
ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களுக்கு என்னென்ன பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்பது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்து உள்ளார்.
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 31-ந் தேதி வரை ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஊரடங்கால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான காய்கறி, பால் போன்ற பொருட்கள் கிடைக்காமல் போய்விடும் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

இதையடுத்து ஊரடங்கில் எதற்கு எல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

* வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். சேவைகள் மற்றும் அதுதொடர்பான பணிகள்.

* பத்திரிகை மற்றும் செய்தி சேனல்கள்.

* தொலை தொடர்பு, அஞ்சல், இணையதள சேவைகள்

* அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் வினியோகம்.

* காய்கறி, மளிகை பொருட்கள்.

* வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி

மருந்து பொருட்கள்

* உணவு, மருந்து, மருத்துவ பொருட்கள் டெலிவிரி சேவை

* பால், ரொட்டி, பழங்கள், முட்டை, இறைச்சி, மீன் விற்பனை மற்றும் கொண்டு செல்லுதல்.

* பேக்கரி மற்றும் செல்லப்பிராணி உணவு பொருள் கடை.

* ஓட்டல்களில் பார்சல் செய்து உணவை விற்பனை செய்ய மற்றும் வீடுகளுக்கு டெலிவிரி செய்ய அனுமதி.

* ஆஸ்பத்திரி, மருந்துக்கடை, மூக்கு கண்ணாடி கடை, மருந்து உற்பத்தி ஆலை, மருந்து பொருள் கொண்டு செல்ல அனுமதி.

* பெட்ரோல் பங்க், பெட்ரோலிய பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி.

* காவல் பணியில் ஈடுபடுபவா்கள்.

இவை அனைத்துக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உணவு, குடிநீர் வழங்கப்படும்; வெளிமாநில தொழிலாளர்கள் மராட்டியத்தை விட்டு வெளியேற வேண்டாம் - உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கப்படும் என்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் மராட்டியத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
2. அத்தியாவசிய தேவைகளான மளிகை, மருந்து கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனுமதி
அத்தியாவசிய தேவைகளான மருந்து, மளிகை கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனுமதி அளித்து உள்ளார்.
3. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு உள்ளது - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
மராட்டியத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
4. மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என முதல்-மந்திரி வேண்டுகோள்
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. சட்டம்-ஒழுங்கு குறித்து விமர்சித்த பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி
மராட்டியத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து விமர்சித்த பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்து உள்ளார்.