மாவட்ட செய்திகள்

ராய்காட் மாவட்டத்தில் ‘நிசர்கா’ புயலால் நிர்கதியான மக்கள் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிப்பு + "||" + Nisarga Storm in Raigad District Losing people homes and suffering

ராய்காட் மாவட்டத்தில் ‘நிசர்கா’ புயலால் நிர்கதியான மக்கள் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிப்பு

ராய்காட் மாவட்டத்தில் ‘நிசர்கா’ புயலால் நிர்கதியான மக்கள் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிப்பு
ராய்காட் மாவட்டத்தில் புயலால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
மும்பை,

நிசர்கா புயல் கடந்த புதன்கிழமை சுமார் 110 கி.மீ. வேகத்தில் மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் கடற்கரை நகரமான அலிபாக் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக ஒரு லட்சம் மரங்கள் விழுந்து உள்ளன.


மேலும் மின் வினியோகம் தடைப்பட்டு, தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவர்தன் தாலுகா மேட்கர்னி என்ற கிராமம் புயலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் பலர் வீடுகளை இழந்து உள்ளனர். மேலும் பல கிராமங்களிலும் புயலுக்கு வீட்டின் கூரைகள் பறந்தன. பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் பலர் நிர்கதி நிலையை அடைந்து உள்ளனர்.

புயல் பாதிப்பு குறித்து சுனிதா என்ற பெண் கூறுகையில், "எனது வீட்டில் ஒன்றும் இல்லை. வீட்டின் மேற்கூரை பறந்துவிட்டது. சுவர் இடிந்து பாத்திரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டது. எனக்கு வருவாய் ஈட்டி தந்த தையல் எந்திரமும் உடைந்துவிட்டது. ஏற்கனவே ஊரடங்கால் வேலையில்லாமல் போய்விட்டது. தற்போது புயலால் எங்கள் பிரச்சினை 2 மடங்காக உயர்ந்துவிட்டது’’ என்று வேதனையுடன் கூறினார்.

மஞ்சுளா ஜாதவ் என்பவர் கூறுகையில், “நிசர்கா புயல் போன்ற ஒன்றை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. புயலால் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்” என்றார்.

கடன் வாங்கி 2 வாரங்களுக்கு முன் கட்டி முடித்த வீட்டை புயலுக்கு இழந்த பெண் ஒருவர் கூறும்போது, ‘‘2 மணி நேரத்தில் நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். எனது குடும்பம் வாழ தற்போது இடம் கூட இல்லை’’ என உருக்கமாக கூறினார்.

இந்த புயல் பாதிப்புகளை மாவட்ட நிர்வாகம் கணக்கிட தொடங்கி உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நித்தி சவுத்ரி கூறும்போது, “புயல் பாதிப்புகளை கணக்கிட்டு வருகிறோம். ஸ்ரீவர்தன் மற்றும் முர்டு தாலுகா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.