மாவட்ட செய்திகள்

இந்தி நடிகர் சோனு சூட் உதவியால் சொந்த ஊர் திரும்பிய தமிழர்கள் + "||" + With the help of Hindi actor Sonu Sood Tamils who returned home

இந்தி நடிகர் சோனு சூட் உதவியால் சொந்த ஊர் திரும்பிய தமிழர்கள்

இந்தி நடிகர் சோனு சூட் உதவியால் சொந்த ஊர் திரும்பிய தமிழர்கள்
இந்தி நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
மும்பை,

வெளிமாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களை பஸ், விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார். இந்தநிலையில் சயான்கோலிவாடா பகுதியில் சிக்கிய தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்யுமாறு அந்த பகுதியை சேர்ந்த சிலர் நடிகர் சோனு சூட்டின் அலுவலகத்துக்கு சென்று உதவி கேட்டனர். இதையடுத்து சோனு சூட் சயான் கோலிவாடாவில் சிக்கிய சுமார் 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். எனினும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பஸ் மூலம் மும்பையில் சிக்கிய தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார். இதில் முதல் பஸ் நேற்று மாலை வடலா டி.டி. பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. நடிகர் சோனு சூட் தேங்காய் உடைத்து பஸ்சை அனுப்பி வைத்தார். மேலும் பத்திரமாக செல்லுமாறு தமிழர்களிடம் கூறினார்.


இதேபோல தங்களுக்கு சொந்த ஊர் திரும்ப உதவி செய்த சோனு சூட்டிற்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர். நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை - பிரதமர் மோடி இரங்கல்
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
2. 2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்
2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.