மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிட உத்தரவிடமுடியாது மும்பை ஐகோர்ட்டு மறுப்பு + "||" + Mumbai court refuses to order release of names of corona patients

கொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிட உத்தரவிடமுடியாது மும்பை ஐகோர்ட்டு மறுப்பு

கொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிட உத்தரவிடமுடியாது மும்பை ஐகோர்ட்டு மறுப்பு
கொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிட அரசுக்கு உத்தரவிடமுடியாது என மும்பை ஐகோர்ட்டு மறுத்து உள்ளது.
மும்பை,

சோலாப்பூரை சேர்ந்த விவசாயி ஒருவரும், சட்ட மாணவி வைஷ்ணவி கோலே என்பவரும் மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில், கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் பெயரை வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என கூறியிருந்தனர். மேலும் பல முக்கிய பிரமுகர்களும், நடிகர்களும் கூட தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதை வெளிப்படையாக அறிவித்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர் என மனுதாரர்களின் வக்கீல் கோர்ட்டில் கூறியிருந்தார்.


ஐகோர்ட்டு மறுப்பு

இந்தநிலையில் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு கொரோனா நோயாளிகளின் பெயர்களை அறிவிப்பதால் சமூகத்துக்கு நன்மை கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள், ஆய்வு முடிவுகள் இருந்தால் அதுபோன்ற தகவல்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களிடம் கூறியது.

மேலும் தற்போது கொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிடுமாறு உத்தரவிட முடியாது என கூறிய மும்பை ஐகோர்ட்டு, மனுவை வாபஸ் பெறுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், பணத்தை பெற்றுக்கொண்டு இ-பாஸ் வழங்கும் அரசு அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
2. படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் ஐகோர்ட்டு உத்தரவு
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள விதிக்கப்பட்டு இருந்த தடை மும்பை ஐகோர்ட்டு உத்தரவால் நீக்கப்பட்டுள்ளது.
3. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை மந்திரி ஆதித்ய தாக்கரே மறுப்பு
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மந்திரி ஆதித்ய தாக்கரே மறுப்பு தெரிவித்து உள்ளார்.
4. ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு எப்படி முட்டை வழங்குவது? அரசு முடிவு செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு
மாணவர்களுக்கு எப்படி முட்டை வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. பக்ரீத் பண்டிகைக்கு பொது இடங்களில் விலங்குகளை பலியிட கூடாது சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.