மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனையை குறைத்ததால் தொற்று நோய் பாதிப்பு குறைந்துள்ளது முதல்-மந்திரிக்கு பட்னாவிஸ் கடிதம் + "||" + Because the corona reduced the test The risk of infection is reduced Chief - Minister letter from Patnavis

கொரோனா பரிசோதனையை குறைத்ததால் தொற்று நோய் பாதிப்பு குறைந்துள்ளது முதல்-மந்திரிக்கு பட்னாவிஸ் கடிதம்

கொரோனா பரிசோதனையை குறைத்ததால் தொற்று நோய் பாதிப்பு குறைந்துள்ளது முதல்-மந்திரிக்கு பட்னாவிஸ் கடிதம்
கொரோனா பரிசோதனையை குறைத்ததால், தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது என்றும், எனவே பரிசோதனை எண்ணிக்கையை அதிகாிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் எழுதி உள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதே இதற்கு காரணம் என சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். எனவே சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தினமும் சராசாியாக 84 ஆயிரத்து 675 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அதேமாதம் 16 முதல் 30-ந் தேதி வரை சராசரியாக தினமும் 91 ஆயிரத்து 743 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அக்டோபர் 1 முதல் 15 வரை தினமும் 75 ஆயிரத்து 296 பேருக்கு மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் தான் பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. எனவே உண்மை நிலவரத்தை அறிய கொரோனா சோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகலா? தேவேந்திர பட்னாவிஸ் பதில்
ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகப்போவதாக கூறப்படுவதற்கு முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்தார்.
2. விவசாயிகளுக்கு கடன் வாங்கி உதவுவது பாவம் அல்ல தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார்
விவசாயிகளுக்கு கடன் வாங்கி உதவுவது பாவம் அல்ல என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
3. நாடும் நாட்டு மக்களும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் - தேவேந்திர பட்னாவிஸ்
நாடும் நாட்டு மக்களும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளதாக மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும் பீகார் மாநில தேர்தல் பொறுப்பாளருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
4. பீகார் மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்
பீகார் மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்.
5. தேவேந்திர பட்னாவிசுடன் சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத் சந்திப்பு- மராட்டிய அரசியலில் பரபரப்பு
தேவேந்திர பட்னாவிசை சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத் நேற்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.