மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் பிரபல பான் கடை உரிமையாளா் கைது + "||" + Celebrity pan shop owner arrested in drug case

போதைப்பொருள் வழக்கில் பிரபல பான் கடை உரிமையாளா் கைது

போதைப்பொருள் வழக்கில் பிரபல பான் கடை உரிமையாளா் கைது
போதைப்பொருள் வழக்கில் பிரபல பான் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை, 

மும்பையின் கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் பிரபல பான் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு பல சினிமா பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்தநிலையில் சமீபத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இங்கிலாந்தை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து 200 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது போதைப்பொருள் கும்பலுடன் பிரபல பான் கடையின் உரிமையாளர்களில் ஒருவரான ராம்குமார் திவாரிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு ராம்குமாா் திவாரிக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் நேற்று முன்தினம் அவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் விசாரணைக்கு பிறகு நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

பிரபல பான்கடை உரிமையாளர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு விவகாரம்: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உள்பட 9 பேர் மீது அவமதிப்பு வழக்கு
மருத்துவ படிப்புகளுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உள்பட 9 பேர் மீது தி.மு.க. தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அவர்கள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. தேர்தல் விதியை மீறி ஊர்வலம் சென்ற தே.மு.தி.க.வினர் 63 பேர் மீது வழக்கு
தேர்தல் விதியை மீறி ஊர்வலம் சென்ற தே.மு.தி.க.வினர் 63 பேர் மீது வழக்கு.
3. 12 இந்தியர்கள் பலியான பஸ் விபத்து வழக்கு: டிரைவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ஒரு ஆண்டாக குறைப்பு துபாய் கோர்ட்டு உத்தரவு
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இருந்து துபாய் நகருக்கு வந்த பயணிகள் பஸ் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி சாலையின் தகவல் பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஷேக் முகம்மது பின் ஜாயித் சாலையில் ஏற்பட்டது. மொத்தம் 17 பயணிகள் இந்த விபத்தில் பலியானார்கள்.
4. டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கு: நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கில், நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டது.
5. 7 பேர் கொலை வழக்கு: தாயாரின் மரண தண்டனையை குறைக்க மகன் வேண்டுகோள்
சொந்த குடும்பத்தினர் 7 பேரை கொன்ற வழக்கில் தாயாரின் மரண தண்டனையை குறைக்கும்படி மகன், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.