மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 50 பேர் கொரோனாவுக்கு பலி + "||" + 50 more killed in Maratha to Corona

மராட்டியத்தில் மேலும் 50 பேர் கொரோனாவுக்கு பலி

மராட்டியத்தில் மேலும் 50 பேர் கொரோனாவுக்கு பலி
மராட்டியத்தில் மேலும் 50 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மும்பை, 

மராட்டியத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 74 ஆயிரத்து 488 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 18 ஆயிரத்து 71 ஆயிரத்து 120 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 51 ஆயிரத்து 892 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் மேலும் 50 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை 50 ஆயிரத்து 151 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து இருக்கிறார்கள்.

தாராவியில் 4 பேர்

தலைநகர் மும்பையில் புதிதாக 473 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. 7 பேர் பலியாகி உள்ளனர். நகரில் இதுவரை 2 லட்சத்து 99 ஆயிரத்து 799 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தாராவியில் புதிதாக 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நோய் பாதித்த 3 ஆயிரத்து 859 பேரில் 3 ஆயிரத்து 524 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது அங்கு 15 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு பிரேசில் தடை
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு பிரேசில் தடை விதித்துள்ளது.
2. கொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்
கொரோனாவின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்று சிங்கப்பூர் தெரிவித்துள்ளது
3. நாடு முழுவதும் 1,138 விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது: ரெயில்வே அமைச்சகம் தகவல்
நாடு முழுவதும் 1,138 விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. கேரளாவில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி; குமரியில் அன்னாசி பழம் ஏற்றுமதி பாதிப்பு; விவசாயிகள் கவலை
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் குமரியில் அன்னாசிபழம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா இறுதிச்சடங்குக்கு அதிக கட்டணம்; தென்ஆப்பிரிக்காவில் புரோகிதர்கள் மீது குற்றச்சாட்டு
தென்ஆப்பிரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என புரோகிதர்கள் மீது இந்து அமைப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.