தேசிய செய்திகள்

மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா + "||" + Maharashtra Minister Chhagan Bhujbal Tests Positive For Coronavirus

மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா

மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா
மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பாதிக்கப்பட்ட 7-வது மந்திரி இவர் ஆவார்.
சகன் புஜ்பால் பாதிப்பு
மராட்டியத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மந்திரிகள் உள்ளிட்ட பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே, நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல், மந்திரிகள் சதேஜ் பாட்டீல், ராஜேந்திர சிங்னே, பச்சு கடு ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஏக்நாத் கட்சேவும் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான சகன் புஜ்பாலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நலத்துடன் உள்ளேன்
இதுகுறித்து தகவலை அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அதில் அவர், "எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நல்ல உடல் நலத்துடன் உள்ளதால் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளவும். எல்லோரும் கவனமாக இருக்கவும். முககவசம், சானிடைசரை பயன்படுத்துங்கள்" என கூறியுள்ளார்.

மாநிலத்தில் இதுவரை துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்பட 20-க்கும் மேற்பட்ட மந்திரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இதில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து இந்த மாதத்தில் மட்டும் 7 மந்திரிகளை தொற்று தாக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை
கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை.
2. ஓமனில், கொரோனாவால் கடந்த 3 நாட்களில் 868 பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 1500-ஐ கடந்தது
ஓமனில், கொரோனாவால் கடந்த 3 நாட்களில் 868 பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 1500-ஐ கடந்தது.
3. கொரோனாவுக்கு எதிரான போரில் ‘உலகளாவிய தலைவர், இந்தியா’; ஐ.நா. சபை பாராட்டு
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவின் தலைமைக்கும், கொரோனா வைரஸ் தடுப்பூசி உதவிக்கும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
4. புதிதாக 6 பேருக்கு கொரோனா
புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
5. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.