மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஷீரடி சாய்பாபா கோவில் மூடல் + "||" + Echo of corona increase in Maharashtra ; Shirdi Sai Baba Temple Closure

மராட்டியத்தில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஷீரடி சாய்பாபா கோவில் மூடல்

மராட்டியத்தில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஷீரடி சாய்பாபா கோவில் மூடல்
மராட்டியத்தில் கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு விண்ணை முட்டும் அளவுக்கு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு ஊரடங்கு மற்றும் பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

இந்த நிலையில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்திபெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் நேற்று இரவு முதல் மூடப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ சாய்பாபா சான்ஸ்தான் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திர தாக்கரே கூறுகையில், “கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலின் பக்தர்கள் தங்குமிடம் மற்றும் அன்னதான கூடமும் மூடப்பட்டு இருக்கும். இருப்பினும் கோவிலுக்குள் தினமும் வழக்கமான பூஜை நடைபெறும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: துபாயில், கடந்த மாதம் மட்டும் 11 வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டது; பொருளாதாரத்துறை தகவல்
துபாய் அரசின் பொருளாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2. புதிதாக 2,113 பேருக்கு தொற்று அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 2,279 பேர் குணமடைந்தனர்
புதிதாக 2,113 பேருக்கு தொற்று அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 2,279 பேர் குணமடைந்தனர்.
3. கடந்த 3 நாட்களில் ஓமனில் 3,139 பேருக்கு கொரோனா 9 பேர் பலி
ஓமனில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்
காஷ்மீரில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால், மேல்நிலைப் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
5. அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்; தொண்டர்களுக்கு நவநிர்மாண் சேனா வேண்டுகோள்
அரசு விதித்திருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு தொண்டர்களுக்கு, நவநிர்மாண் சேனா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.