மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக 30-ந் தேதி வரை கடற்கரைகள் மூடல்; மாநகராட்சி கமிஷனர் உத்தரவு + "||" + Beaches closed until 30 due to corona spread; Order of the Commissioner of the Corporation

கொரோனா பரவல் காரணமாக 30-ந் தேதி வரை கடற்கரைகள் மூடல்; மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக 30-ந் தேதி வரை கடற்கரைகள் மூடல்; மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
கொரோனா தொற்று பரவல் காரணமாக மும்பை கடற்கரைகளை வருகிற 30-ந் தேதி வரை மூட மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

கமிஷனர் உத்தரவு

மராட்டியத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநில அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரங்கு, பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் நேற்று மும்பை மாகராட்சி கமிஷனர் இக்பால் சகால் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் வருகிற 30-ந் தேதி வரை மூட அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை மாநகராட்சி உதவி கமிஷனர்கள் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவில் கூறியிருந்தார்.

மூடப்பட்டன

அதன்படி மும்பையில் அனைத்து கடற்கரைகளும் நேற்று மூடப்பட்டன. போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரைகள் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்ரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்போரூர் அருகே தனியார் குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
2. முன்னாள் சர்வதேச ஹாக்கி பெண் நடுவர் கொரோனா தொற்றால் மறைவு
கொரோனா தொற்றால் மறைந்த முன்னாள் சர்வதேச ஹாக்கி பெண் நடுவருக்கு ஹாக்கி இந்தியா இரங்கல் தெரிவித்து உள்ளது.
3. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் நிலை உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் நிலை உதவி ஆய்வாளர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. தடை காலத்தை பயன்படுத்தி தாஜ்மகால் பராமரிப்பு பணி; தொல்பொருள் ஆய்வுத்துறை நடவடிக்கை
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் வரும் நினைவுச்சின்னங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை