மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா; 297 பேர் பலி + "||" + Corona for another 55,000 in Maharashtra; 297 killed

மராட்டியத்தில் மேலும் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா; 297 பேர் பலி

மராட்டியத்தில் மேலும் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா; 297 பேர் பலி
மராட்டியத்தில் மேலும் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 297 பேர் உயிரிழந்தனர். தாராவியில் 62 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 55,469 பேர்

மராட்டியத்தில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று புதிதாக 55 ஆயிரத்து 469 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் இது வரையிலான பாதிப்பு 31 லட்சத்து 13 ஆயிரத்து 354 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல ஒரே நாளில் 297 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணி்ககை 56 ஆயிரத்து 330 ஆக அதிகரித்தது. தற்போது 4 லட்சத்து 72 ஆயிரத்து 283 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை

மும்பையில் புதிதாக 10 ஆயிரத்து 30 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை 4 லட்சத்து 72 ஆயிரத்து 332 ஆக அதிகரித்தது. மேலும் கொரோனாவில் சிகிச்சை முடிந்து நேற்று 7 ஆயிரத்து 19 பேர் வீடு திரும்பினர். தற்போது 77 ஆயிரத்து 495 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் நேற்று தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி 31 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 828 ஆக அதிகரித்தது. நோயின் தாக்கம் இரட்டிப்பாகும் காலம் 38 நாட்களாக உள்ளது. இதைத்தவிர கட்டுப்பாட்டு மண்டலமாக 73 இடங்களும், 740 கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளது.

தாராவி

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் புதிதாக 62 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தாராவியில் இதுவரை பாதித்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 300 ஆக அதிகரித்தது. இதே போல தாதரில் புதிதாக 119 பேரும், மாகிமில் 103 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 500-ஐ தாண்டியது; 2 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 503 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2. 3-வது டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா? - நிபுணர்கள் பதில்
3-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும், 3-வது டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா என்பது குறித்து நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர்.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது: புதிய உச்சமாக 2,73,810 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,73,810 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.18 கோடியை தாண்டியது
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.18 கோடியை தாண்டியுள்ளது.
5. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை