தேசிய செய்திகள்

போலீஸ் துறையில் அரசியலை நுழைய விட மாட்டேன்; மராட்டிய புதிய உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் பேட்டி + "||" + I will not let politics enter the police field; Maharashtra Home Minister Dilip Walse Patil

போலீஸ் துறையில் அரசியலை நுழைய விட மாட்டேன்; மராட்டிய புதிய உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் பேட்டி

போலீஸ் துறையில் அரசியலை நுழைய விட மாட்டேன்; மராட்டிய புதிய உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் பேட்டி
போலீஸ் துறையில் அரசியலை நுழைய விட மாட்டேன் என்று புதிய உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் கூறினார்.
பொறுப்பு ஏற்றார்
ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி மும்பை போலீசாரை உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்தியது உள்ளிட்ட முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்தார்.இதன் காரணமாக உள்துறை இலாகா தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மந்திரியுமான திலீப் வல்சே பாட்டீல் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் புதிய உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியலை நுழைய விட மாட்டேன்
அனில் தேஷ்முக்கிற்கு எதிரான வழக்கில் சி.பி.ஐ.க்கு தேவையான ஒத்துழைப்பை அரசு வழங்கும். அதே நேரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்வோம். அனில் தேஷ்முக் இக்கட்டான கொரோனா காலக்கட்டத்தில் மிகவும் பொறுப்புடனும், திறம்படவும் செயல்பட்டார். அவர் போலீஸ் துறையில் அரசியலை நுழைக்காமல் பணி செய்தார்.

பொதுமக்கள் போலீஸ் துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த வகையில் போலீஸ் துறையை வழிநடத்தி செல்வேன். போலீஸ் துறையில் எனது தரப்பில் இருந்து அரசியலை நுழைய விட மாட்டேன். சக்தி சட்டத்திற்கு முன்னுரிமை அளித்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.