தேசிய செய்திகள்

மேற்கு வங்காள தேர்தல் உணர்த்தி விட்டது; மோடி, அமித்ஷா வெல்ல முடியாதவர்கள் அல்ல: சிவசேனா + "||" + West Bengal polls show Modi, Amit Shah are not invincible: Shiv Sena

மேற்கு வங்காள தேர்தல் உணர்த்தி விட்டது; மோடி, அமித்ஷா வெல்ல முடியாதவர்கள் அல்ல: சிவசேனா

மேற்கு வங்காள தேர்தல் உணர்த்தி விட்டது; மோடி, அமித்ஷா வெல்ல முடியாதவர்கள் அல்ல: சிவசேனா
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதை மேற்கு வங்காள தேர்தல் உணர்த்துவதாக சிவசேனா கூறியுள்ளது.

5 மாநில தேர்தல்

மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

இதில் மேற்கு வங்காள தேர்தல் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

5 மாநில தேர்தலில் அனைவரது கண்களும் மேற்கு வங்கத்தின் மீது தான் இருந்தது. பொங்கி எழுந்த கொரோனா நோயை கையாளும் பணியை ஓரம் கட்டி வைத்துவிட்டு பிரதமர் மோடி உள்பட முழு மத்திய ஆட்சியாளர்களும் மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க மும்முரமாக வேலை செய்தனர். இருப்பினும் பா.ஜனதா கொடுத்த அனைத்து சவால்களையும் எதிர்கொண்ட மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி கண்டுள்ளார்.

அனைத்து அரசு எந்திரங்களும், பண பலமும், தொழில்நுட்பங்களும் தங்களது வசம் இருந்தாலும், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதை இந்த தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.

கொரோனா வெற்றி

மேற்கு வங்கத்தை வெல்லும் ஒரே நோக்கத்துடன் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் களத்தில் நுழைத்து கொரோனா தடுப்பு விதிகளை புறம்தள்ளிவிட்டு பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தினர். மாநிலங்களில், குறிப்பாக மேற்கு வங்காளத்தில் நீண்டகாலமாக பிரசாரம் செய்தது கொரோனா பரவ காரணமாக இருந்ததாக சென்னை ஐகோர்ட்டு சுட்டிக்காட்டியது. மேற்கு வங்க தேர்தல் முடிவை பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் பா.ஜனதா தோற்றுள்ளது, கொரோனா வென்றுள்ளது.

செயற்கை அலை

இந்த தேர்தலில் பா.ஜனதாவின் தோல்விக்கு யார் பொறுப்பேற்பார்கள். அசாம் மற்றும் புதுச்சேரியை தவிர வேறு எங்கும் பா.ஜனதா சிறப்பாக செயல்படவில்லை. மேற்கு வங்காள மக்கள் ஒரு செயற்கை அலைக்கு இரையாகாமல் இருந்ததற்கும், தங்களின் சொந்த கவுரவத்திற்காக ஒற்றுமையாக நின்றதையும் பாராட்ட வேண்டும். இந்த நாடு மேங்கு வங்காளத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நிலவரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்; சிவசேனா வலியுறுத்தல்
கொரோனா நிலவரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
2. “கொரோனா வைரஸ் கையில் கிடைத்தால், தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன்” சிவசேனா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
“கொரோனா வைரஸ் கையில் கிடைத்தால், தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன்” என சிவசேனா எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்தை கூறியுள்ளாா்.
3. மேற்கு வங்காள தேர்தல்: மாலை 4 மணி நிலவரப்படி 69.40% வாக்குகள் பதிவு
மேற்கு வங்காள தேர்தலில் மாலை 4.15 மணி நிலவரப்படி 69.40% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
4. மேற்கு வங்காள தேர்தல்: பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாக்கு பதிவு
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலின் 4வது கட்ட வாக்கு பதிவில் பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி இன்று தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
5. தேசிய அரசியலின் போக்கை 5 மாநில தேர்தல் முடிவு செய்யும்; சிவசேனா கருத்து
தேசிய அரசியலின் போக்கை 5 மாநில தேர்தல் முடிவுகள் முடிவு செய்யும் என்று சிவசேனா கருத்து கூறியுள்ளது.