தேசிய செய்திகள்

மும்பையில் தினசரி கொரோனா பரிசோதனையை 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; மாநகராட்சி கமிஷனர் வலியுறுத்தல் + "||" + To raise the daily corona test to 40,000 in Mumbai; The Commissioner of the Corporation insisted

மும்பையில் தினசரி கொரோனா பரிசோதனையை 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; மாநகராட்சி கமிஷனர் வலியுறுத்தல்

மும்பையில் தினசரி கொரோனா பரிசோதனையை 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; மாநகராட்சி கமிஷனர் வலியுறுத்தல்
மும்பையில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த வேண்டும் மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியுள்ளார்.

பாரிசோதனை குறைவு

மராட்டியத்தை கொரோனா பாதிப்பு ஆட்டி படைத்து வருகிறது. இதில் தலைநகரான மும்பையில் சமீப நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதேபோல் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாகல் நேற்று கூறியதாவது:-

மக்களுக்கு வேண்டுகோள்

மும்பையில் முன்பு ஒரு நாள் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையின் அளவு 50 ஆயிரமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இந்த எண்ணிக்கை 38 ஆயிரமாகவும், மே 2-ந் தேதி 28 ஆயிரமாகவும் குறைந்துள்ளது. வார இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். கொரோனா ஒருநாள் சோதனை எண்ணிக்கையை நாம் 40 ஆயிரமாக அதிகரிக்கவேண்டும். இந்த சோதனைக்கு முன்வருமாறு நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

தொற்றுநோயின் முதல் அலையின் போது கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் கடந்த பிப்ரவரி 10-ந் தேதி வரை மும்பையில் அதிகபட்சமாக ஒருநாளைக்கு 24 ஆயிரத்து 500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாவது அலையின்போது பரிசோதனை இருமடங்காக அதிகரிக்கப்பட்டது. ஒருநாளைக்கு பரிசோதனை எண்ணிக்கை 56 ஆயிரம் வரை சென்றது. ஏப்ரல் மாத்தில் எங்கள் சராசரி தினசரி பரிசோதனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 44 ஆயிரம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமீரகத்தில் ஒரே நாளில் 1,772 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2. துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சிறந்த சுகாதார பராமரிப்பிற்கான அங்கீகாரம்; சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் சான்றிதழ் வழங்கியது
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சிறப்பான கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் அங்கீகாரம் அளித்து சான்றிதழை வழங்கியுள்ளது.
3. வீரர்கள் இருவருக்கு கொரோனா; இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடும் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகத்தில் தாலுகா அளவில் கொரோனா சிகிச்சை மையங்கள்; போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் தாலுகா அளவில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
5. கொரோனாவை கட்டுப்படுத்த நாளை மறுதினம் முதல் ஒடிசாவில் 14 நாட்கள் பொதுமுடக்கம்
ஒடிசாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுதினம் முதல் 14 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் முழு அடைப்பும் அமலாகிறது.