மாவட்ட செய்திகள்

கூறிய பல விஷயங்கள் சரியாகி இருக்கிறது ராகுல் காந்தியின் வார்த்தைகளில் வலு உள்ளது சஞ்சய் ராவத் சொல்கிறார் + "||" + In the words of Rahul Gandhi There is strength Says Sanjay Rawat

கூறிய பல விஷயங்கள் சரியாகி இருக்கிறது ராகுல் காந்தியின் வார்த்தைகளில் வலு உள்ளது சஞ்சய் ராவத் சொல்கிறார்

கூறிய பல விஷயங்கள் சரியாகி இருக்கிறது ராகுல் காந்தியின் வார்த்தைகளில் வலு உள்ளது சஞ்சய் ராவத் சொல்கிறார்
ராகுல் காந்தி கூறிய பல விஷயங்கள் சரியாக இருப்பதால், அவரது வார்த்தைகளில் வலு உள்ளது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மும்பை,

பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடும் என அறிவித்தார். முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கொரோனா வைரஸ் கையாளும் முறை, தடுப்பூசி கொள்கையிலும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பொது மக்களுக்கு அதிகளவில் தடுப்பூசி போட்டு இருந்தால், 2-வது அலையால் நாடு இந்தநிலைக்கு மோசமாகி இருக்காது எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில் ராகுல் காந்தியின் விமர்சனங்கள், கருத்துகள் சரியாக உள்ளதா என்பது குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது.

ராகுல் காந்தி கூறிய பல விஷயங்கள் சரியாக இருந்து உள்ளன. சில அல்ல, அவரது பல கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. அவர் கொரோனா வைரஸ் அல்லது தடுப்பூசி குறித்து பேசியவை உண்மையாகி உள்ளன. அவரது வார்த்தைகளில் வலு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.