மாவட்ட செய்திகள்

மழைக்கால முன்னெச்சரிக்கை பணி முடிந்ததாக கூறியது பொய்சாக்கடைகள் தூர்வாரியதில் முறைகேடு பா.ஜனதா குற்றச்சாட்டு + "||" + Rainy season precautionary work Abuse in sewer dredging BJP charge

மழைக்கால முன்னெச்சரிக்கை பணி முடிந்ததாக கூறியது பொய்சாக்கடைகள் தூர்வாரியதில் முறைகேடு பா.ஜனதா குற்றச்சாட்டு

மழைக்கால முன்னெச்சரிக்கை பணி முடிந்ததாக கூறியது பொய்சாக்கடைகள் தூர்வாரியதில் முறைகேடு பா.ஜனதா குற்றச்சாட்டு
மழைநீர் கால்வாய், சாக்கடை கால்வாய்களை தூர்வாரியதில் முறைகேடு நடந்துள்ளது. மழைக்கால முன் எச்சரிக்கை பணி முடிந்துவிட்டதாக கூறிய பொய் அம்பலமாகி விட்டதாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை, 

மும்பையில் மழைக்கால முன் எச்சரிக்கை பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. சாக்கடை கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள் போன்றவை தூர்வாரப்பட்டன.

மழை முன் எச்சரிக்கை பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாக மாநகராட்சி சமீபத்தில் தெரிவித்து.

இந்தநிலையில் நேற்று மும்பையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கின.

இதுகுறித்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆசிஸ் செலார் கூறியிருப்தாவது:-

மும்பையில் மழைநீரை வெளியேற்றும் நீரோடைகள், சாக்கடை கால்வாய்கள் மற்றும் திறந்தவெளி வடிகால்களை சுத்தம் செய்யும் பணி 100 சதவீதம் முடிந்து விட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது. ஆனால் கடும் மழையின் காரணமாக நகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. ரெயில் தடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்ததாக கூறியது பொய் என்பது அம்பலமாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நகரில் உள்ள சாக்கடை கால்வாய்கள் மற்றும் திறந்தவெளி வடிகால்களை சுத்தம் செய்ய ரூ.150 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இருப்பினும் அதிகாரிகளுக்கும், மாநகராட்சியை ஆளும் கட்சியினரும் கூட்டு சேர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி வரை கொள்ளை அடித்து உள்ளனர்.

இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க துப்புரவு பணியின்போது அகற்றப்பட்ட கழிவு ஆதாரங்களை நாங்கள் ஒப்பந்ததாரர்களிடம் கோரியுள்ளோம் ஆனால் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.