தேசிய செய்திகள்

50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசியலைப்பு சட்டத்தில் திருத்தம்; மராட்டிய சட்டசபையில் தீர்மானம் + "||" + Maha House passes resolution asking Centre to bring amendment to remove ceiling on quotas

50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசியலைப்பு சட்டத்தில் திருத்தம்; மராட்டிய சட்டசபையில் தீர்மானம்

50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசியலைப்பு சட்டத்தில் திருத்தம்; மராட்டிய சட்டசபையில் தீர்மானம்
50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என மராட்டிய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என மராட்டிய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடஒதுக்கீடு அதிகரிப்பு
மராட்டியத்தில் சுமார் 30 சதவீதம் மக்கள் தொகை கொண்ட மராத்தா சமுதாயத்தினர் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில்  இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
இதையேற்று கடந்த பா.ஜனதா ஆட்சியில் மராத்தா சமுதாயத்தினரை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் (என்.சி.பி.சி.) என்று வகைப்படுத்தி அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்மூலம் மராட்டியத்தில் இடஒதுக்கீடு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி 50 சதவீதத்தை தாண்டியது. எனவே மராத்தா இடஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மராத்தா இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதன் காரணமாக மராத்தா மக்கள் மீண்டும் போராட்டத்ைத தொடங்கி உள்ளனர். 

தீர்மானம் 
இந்தநிலையில் நேற்று மராட்டிய மழைக்கால சட்டசபை கூட்டத்தின் முதல்நாளில் இதுகுறித்த தீர்மானம் ஒன்றை பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் தாக்கல் செய்தார். அதில், ‘‘சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மீதான 50 சதவீத உச்ச வரம்பை தளர்த்தாமல், சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய வகுப்பினருக்கான ஒதுக்கீட்டை வழங்க முடியாது. எனவே மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டால் நிர்ணயிக்கப்பட்ட சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு குறித்த 50 சதவீத உச்சவரம்பை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்" என கூறப்பட்டு இருந்தது.  

நிறைவேற்றம்
இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மந்திரி அசோக் சவான் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சியான பா.ஜனதா உறுப்பினர்கள் சட்டசபையில் இல்லை. தமிழ்நாட்டில் தற்போது 69 சதவீதம் இடஒதுக்கீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.