தேசிய செய்திகள்

அரியானாவில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் 2-வது ‘ஜாலியன்வாலாபாக்’ சம்பவம்சிவசேனா கடும் தாக்கு + "||" + sena said Lathicharge on Haryana farmers akin to second Jallianwala Bagh

அரியானாவில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் 2-வது ‘ஜாலியன்வாலாபாக்’ சம்பவம்சிவசேனா கடும் தாக்கு

அரியானாவில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் 2-வது ‘ஜாலியன்வாலாபாக்’ சம்பவம்சிவசேனா கடும் தாக்கு
அரியானாவில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் 2-வது “ஜாலியன்வாலாபாக் சம்பவம்’ என சிவசேனா கடுமையாக தாக்கி பேசியுள்ளது.
மும்பை, 
அரியானாவில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் 2-வது “ஜாலியன்வாலாபாக் சம்பவம்’ என சிவசேனா கடுமையாக தாக்கி பேசியுள்ளது.
விவசாயிகள் மீது தடியடி
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைப்போல பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாருக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கார்னல் என்ற பகுதியை நோக்கி பேரணி நடத்தினர். 
ஆனால் இந்த போராட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி விவசாயிகளை கலைத்தனர். இதில் சுமார் 10 விவசாயிகள் பலத்த காயமடைந்தனர்.  விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:-
ஆட்சியில் இருக்க உரிமையில்லை
அமிர்தசரசில் புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலாபாக் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும்போது, அரியானாவில் இரண்டாவது ஜாலியன்வாலாபாக் நடக்கிறது. 
அரசால் விதைக்கப்படும் இந்த கொடூரத்தின் விதைகள் நிச்சயம் கசப்பான பழங்களை கொடுக்கும். இது உறுதியானது. மனோகர் லால் கட்டார் அரசு ஆட்சியில் இருக்க இதற்கு மேல் உரிமை இல்லை.
இந்த தடியடி சம்பவம் இந்திய விவசாயிகளை கிளர்ச்சியடைய செய்துள்ளது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி சொட்டு ரத்தமும் உங்களை நிச்சயம் பழிவாங்கும். 
மத்திய மந்திரி ஒருவர் மராட்டிய முதல்-மந்திரியை தாக்கி பேசுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்போது, இந்த மாநில அரசு சகிப்புத்தன்மையற்றது என அழைக்கப்படுகிறது. 
அரியானா முதல்-மந்திரி கட்டாருக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவசாயிகள் தலையில் லத்தியால் சரமாரியாக தாக்கப்பட்டனர். இப்போது அந்த விமர்சகர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?
டெல்லி போராட்டம்
மத்திய மந்திரி அன்று இரவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் டெல்லிக்கு அருகில் உள்ள காஜிபூர் எல்லையில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், விவசாயத்தை தனியார்மயமாகுவதை தடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி அவர்களை சென்று சந்திக்கவில்லை. இந்த அரசு கல்நெஞ்சம் படைத்தது. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
கண்மூடித்தனமான தாக்குதல்
புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிட வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார். 
1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி ஆங்கிலேய படைகள் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் அமைதியான முறையில் கூடி போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.