தேசிய செய்திகள்

கவர்னருடன் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு12 எம்.எல்.சி.க்களை உடனே நியமிக்க வலியுறுத்தல் + "||" + Maha CM ministers meet governor

கவர்னருடன் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு12 எம்.எல்.சி.க்களை உடனே நியமிக்க வலியுறுத்தல்

கவர்னருடன் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு12 எம்.எல்.சி.க்களை உடனே நியமிக்க வலியுறுத்தல்
மூத்த மந்திரிகளுடன் உத்தவ் தாக்கரே கவர்னரை திடீரென சந்தித்து பேசினார். அப்போது 12 எம்.எல்.சி.க்களை உடனே நியமிக்க வலியுறுத்தினார்.
மும்பை, 
மூத்த மந்திரிகளுடன் உத்தவ் தாக்கரே கவர்னரை திடீரென சந்தித்து பேசினார். அப்போது 12 எம்.எல்.சி.க்களை உடனே நியமிக்க வலியுறுத்தினார். 
 எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரம்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெறும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் 12 நியமன எம்.எல்.சி.க்களின் காலியிடம் ஏற்பட்டது. 
இந்த காலியிடங்களை நிரப்ப பெயர் பட்டியலை தயாரித்து, அதற்கு மந்திரி சபை ஒப்புதல் வழங்கியதோடு, அந்த பட்டியலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் தொடர்ந்து 12 எம்.எல்.சி.க்களை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். 
இந்த பிரச்சினையில் கவர்னரை ஆட்சியாளர்கள் அவ்வப்போது வசைப்பாடி வருகிறார்கள். 
ஐகோர்ட்டு வலியுறுத்தல்
இதற்கு மத்தியில் நாசிக்கை சேர்ந்த ரத்தன் சோலி என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி திபான்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ். குல்கர்னி ஆகியோர் கடந்த மாதம் 13-ந் தேதி விசாரித்தபோது, கவர்னர் தனது அரசியலமைப்பு கடமையை தாமதமின்றி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இ்ந்த உத்தரவை தொடர்ந்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லி சென்று சந்தித்தார். ஐகோர்ட்டு வலியுறுத்திய நிலையிலும் எம்.எல்.சி.க்களை நியமனம் செய்யவில்லை. இது தொடர்பாக சமீபத்தில் கவர்னரை சந்திக்க உத்தவ் தாக்கரே நேரம் கேட்டதாகவும், ஆனால் அதனை கவர்னர் மாளிகை நிராகரித்து விட்டதாகவும் தகவல் வெளியானது. 
திடீர் சந்திப்பு 
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திடீரென கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அவருடன் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரி பாலசாகேப் தோரட் சென்றிருந்தனர். இந்த சந்திப்பின் போது, மேலும் தாமதமின்றி எம்.எல்.சி.க்களை உடனடியாக நியமிக்கும்படி அவர்கள் கவர்னரை வலியுறுத்தினர். 
இதன் மூலம் 10 மாதமாக நிலுவையில் உள்ள எம்.எல்.சி. நியமன விவாகாரம் முடிவுக்கு வருமா? அல்லது இழுபறி நீடிக்குமா? என்பது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.