தேசிய செய்திகள்

வெடிகுண்டு கார் வழக்கில்சச்சின் வாசே உள்ளிட்டவர்கள் மீது 9 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. தாக்கல் + "||" + NIA files charge sheet against Waze

வெடிகுண்டு கார் வழக்கில்சச்சின் வாசே உள்ளிட்டவர்கள் மீது 9 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. தாக்கல்

வெடிகுண்டு கார் வழக்கில்சச்சின் வாசே உள்ளிட்டவர்கள் மீது 9 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. தாக்கல்
அம்பானி வீடு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே உள்ளிட்டவர்கள் மீது 9 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தாக்கல் செய்தது.
மும்பை, 
அம்பானி வீடு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே உள்ளிட்டவர்கள் மீது 9 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தாக்கல் செய்தது.
 வெடிகுண்டு கார்
இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி மாதம் வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மர்மநபர்கள் தனது காரை திருடி வெடிப்பொருட்களுடன் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே நிறுத்தியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார். 
இந்தநிலையில் வெடிப்பொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக் கடந்த 5-ந் தேதி தானே கழிமுகப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். 
போலீசாருக்கு தொடர்பு
இதையடுத்து போலீசார் விசாரணையை வேகப்படுத்தினர். இதில் வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் மற்றும் ஹிரேன் மன்சுக் மரணத்தில் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவுக்கு தொடர்பு இருப்பது  தெரியவந்தது. 
இந்தநிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கையில் எடுத்தது. மேலும் சச்சின் வாசேவை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இவரை தவிர முன்னாள் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ பிரதீப் சர்மா மற்றும் வேறு சில முன்னாள் போலீஸ் அதிகாரிகளும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 
இந்த நிலையில் மத்திய புலனாய்வு முகமை நேற்று குற்றம்சாட்டப்பட்ட சச்சின் வாசே உள்ளிட்டவர்கள் மீது சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 
 9 ஆயிரம் பக்கம்
9 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் சச்சின் வாசே தவிர வினாயக் ஷிண்டே, நரேஷ் கோர், ரியாசுதீன் காஜி, சுனில் மானே, ஆனந்த் ஜாதவ், சதீஷ் மோத்குரி, மணீஷ் சோனி மற்றும் சந்தோஷ் ஷெலார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் வினாயக் ஷிண்டே வேறு வழக்குகளில் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். காஜியும், மானேவும் போலீஸ்துறையில் பணியாற்றி வந்தபோது கைது செய்யப்பட்டனர். 
இவர்கள் மீது குற்றசதி, கடத்தல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருட்கள் சட்டம் மற்றும் ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மேலும் குற்றப்பத்திரிக்கையில் 200 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.