மாவட்ட செய்திகள்

சுவேந்து அதிகாரிக்கு சிஐடி போலீஸ் சம்மன் + "||" + CID summons Bengal LoP Suvendu Adhikari over death of bodyguard

சுவேந்து அதிகாரிக்கு சிஐடி போலீஸ் சம்மன்

சுவேந்து அதிகாரிக்கு சிஐடி போலீஸ் சம்மன்
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கு அம்மாநில சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கொல்கத்தா, 

 கடந்த 2018-ல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியாக சுவேந்து அதிகாரி இருந்த போது, அவரது பாதுகாப்பு அதிகாரியான மாநில ஆயுதப் படை போலீஸ் சுப்ரதா சக்ரவர்த்தி தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென சக்ரவர்த்தியின் மனைவி புகார் செய்தார். 

இது தொடர்பாக, மாநில சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  11 போலீசார் உள்பட 15 பேரிடம் சிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்  பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு  நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அம்மாநில சிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் அக்கட்சி எம்பியுமான அபிஷேக் பானர்ஜி, அவரின் மனைவி ருஜிரா பானர்ஜி ஆகியோரை நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்த நிலையில், சுவேந்துக்கு மாநில சிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? பாஜக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை
குஜராத் முதல் மந்திரியாக இருந்து வந்த விஜய் ரூபானி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2. காங்கிரஸ் 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது; ராகுல் காந்தி
புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
3. ஜம்மு காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக முயற்சி: ராகுல் காந்தி விமர்சனம்
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார்.
4. பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது; மக்களின் வருமானம்?: ராகுல் காந்தி கேள்வி
பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது. ஆனால் உங்களின் வருமானம்? என ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. “தலீபான்கள் ஆட்சியை போல் உள்ளது” மத்திய மந்திரி கைதுக்கு பாஜக கடும் விமர்சனம்
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டார்.