மாவட்ட செய்திகள்

முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ்; வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க நடவடிக்கை + "||" + Lookout notice against Anil Deshmukh

முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ்; வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க நடவடிக்கை

முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ்; வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க நடவடிக்கை
முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மும்பை, 
முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
லுக்அவுட் நோட்டீஸ்
 மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங், மாநில உள்துறை மந்திரி பதவி வகித்த அனில் தேஷ்முக் பார்கள், ஓட்டல்கள் மூலம் மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி போலீசாரை கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். 
இதன்பிறகு அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் தொடர்ந்து நேரில் ஆஜராவதை தவிர்த்து வருகிறார். 
இந்த நிலையில் அனில் தேஷ்முக் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அமலாக்கதுறை லுக்அவுட் நோட்டீஸ் விடுத்து உள்ளது. அதன்படி அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 
தேவேந்திர பட்னாவிஸ் கருத்து
இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பண மோசடி வழக்கு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அனில் தேஷ்முக் மீது அமலாக்கதுறை வெளிநாட்டுக்கு செல்வதை கண்காணிக்கும் லுக்அவுட் நோட்டீல் பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் சட்டப்படி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பது பொறுத்தமானதாக இருக்கும். 
இவ்வாறு அவர் கூறினார்.