தேசிய செய்திகள்

உ.பி., கோவா சட்டசபை தேர்தலில் சிவசேனா போட்டிசஞ்சய் ராவத் தகவல் + "||" + Shiv Sena will contest UP Goa Assembly polls

உ.பி., கோவா சட்டசபை தேர்தலில் சிவசேனா போட்டிசஞ்சய் ராவத் தகவல்

உ.பி., கோவா சட்டசபை தேர்தலில் சிவசேனா போட்டிசஞ்சய் ராவத் தகவல்
உத்தரபிரதேசம், கோவா சட்டசபை தேர்தலில் சிவசேனா போட்டியிடும் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
மும்பை, 
உத்தரபிரதேசம், கோவா சட்டசபை தேர்தலில் சிவசேனா போட்டியிடும் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
தேர்தலில் போட்டி
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம், கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சிவசேனா போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
உத்தரபிரதேச தேர்தலில் சிவசேனா 80 முதல் 100 தொகுதிகளில் போட்டியிடும். கோவா சட்டசபை தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட உள்ளோம். உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் அமைப்பு சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது.
சிறிய கட்சிகளுடனும் நாங்கள் கூட்டணி வைக்கலாம். கோவாவில் மகாவிகாஸ் கூட்டணி போன்ற பார்முலாவை பயன்படுத்த முயற்சி செய்து வருகிறோம். அதில் வெற்றி பெறுவோமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். வெற்றியோ, தோல்வியோ வேட்பாளர்களை நிறுத்த 2 மாநிலங்களிலும் எங்களுக்கு கட்சி தொண்டர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத் முதல்-மந்திரி
குஜராத் முதல்-மந்திரி விஜய் ருபானி ராஜினாமா செய்தது குறித்து கேட்டபோது, ‘‘இது பா.ஜனதாவின் உள்கட்சி விவகாரம். அதில் வெளியாட்கள் கருத்து கூற முடியாது. ராஜ்ய சபா உறுப்பினராக என்னுடன் இருந்தது முதல் விஜய் ருபானியை எனக்கு தெரியும். 
கடந்த முறை பா.ஜனதா குஜராத் தேர்தலில் மயிரிழையில் வெற்றி பெற்றது. தற்போது அங்கு அந்த கட்சிக்கு சரியான நேரம் இல்லை’’ என்றார்.