மாவட்ட செய்திகள்

பிரசவ வலியால் துடித்த பழங்குடியின பெண்ணை 11 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம் + "||" + tribal woman in labour pain made to sit on hospital steps

பிரசவ வலியால் துடித்த பழங்குடியின பெண்ணை 11 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்

பிரசவ வலியால் துடித்த பழங்குடியின பெண்ணை 11 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்
தானே அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வலியால் துடித்த பெண் பல மணி நேரம் ஆஸ்பத்திரி வாசலிலேயே காத்திருக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தானே, 
தானே அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வலியால் துடித்த பெண் பல மணி நேரம் ஆஸ்பத்திரி வாசலிலேயே காத்திருக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
அனுமதி மறுப்பு
தானே பிவண்டியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் ரோகிணி மாருதி முக்னே(வயது 28). 
நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பெண்ணை அவரது உறவினர்கள் பிவண்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 
ஆனால் அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். 
ஊழியர்கள் அந்த பெண்ணின் உறவினர்களிடம் அவருக்கு உடனடியாக ரத்த பரிசோதனை மேற்கொண்டு, அதன்பின்னர்  ரத்தம் செலுத்த ஏற்பாடு செய்தால் மட்டுமே பெண்ணை ஆஸ்பத்திரிக்குள் அனுமதிப்போம் என கூறிவிட்டனர். 
வாசலில் அமரவைப்பு
உறவினர்கள் பல முறை மன்றாடியும் அவர்கள் அனுமதிக்க மறுத்ததால், ஆஸ்பத்திரி வாசல் படியிலேயே பெண்ணை உட்கார வைத்தனர். பிரசவ வலியுடன் அலறியபடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கவேண்டி சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக படிகளிலேயே அந்த பெண் காத்திருந்தது காண்போர் கண்களை கலங்க வைத்தது. 
இருப்பினும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மனம் இறங்கவில்லை. 
சமூக ஆர்வலர்கள் தலையீடு
இந்தநிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை தொடர்புகொண்டு பெண்ணை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். 
இதன் பலனாக ஆஸ்பத்திரி மேற்பார்வையாளர் ராஜேஷ் மோரே சம்பவத்தில் தலையிட்டு இரவு 10 மணி அளவில் அந்த பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதித்தார். 
இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரசவத்துக்காக வந்த பெண் ஆஸ்பத்திரி வாசலில் உட்கார வைக்கப்பட்டது எனக்கு தெரியாது. இரவு 10 மணியளவில் தான் எனக்கு தெரியவந்தது. இதனால் நான் உடனடியாக அவரை அனுமதிக்க ஏற்பாடு செய்தேன்” என்றார். 
பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்க மறுத்து பல மணி நேரம் காக்கவைத்து மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட ஊழியர்களின் செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.