மாவட்ட செய்திகள்

நான் இன்னும் முதல்-மந்திரி தான்-தேவேந்திர பட்னாவிஸ் + "||" + I am still chief Minister That's it fadnavis

நான் இன்னும் முதல்-மந்திரி தான்-தேவேந்திர பட்னாவிஸ்

நான் இன்னும் முதல்-மந்திரி தான்-தேவேந்திர பட்னாவிஸ்
இன்னும் நான் முதல்-மந்திரி போல தான் உணருகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பேசி உள்ளார்.
மும்பை
இன்னும் நான் முதல்-மந்திரி போல தான் உணருகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பேசி உள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டியத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் அவர்கள் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். தேவேந்திர பட்னாவிஸ் அவரது 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தார். 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜனதா 100-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. 

எனினும் சிவசேனா பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை அமைத்ததால் தேவேந்திர பட்னாவிசால் 2-வது முறையாக முதல்-மந்திரி ஆக முடியாமல் போனது.

முதல்-மந்திரி போல...

இந்தநிலையில் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நவிமும்பையில் நடந்த பொது கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

நான் முதல்-மந்திரி இல்லை என மக்கள் ஒருபோதும் என்னை நினைக்க வைத்தது இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் சுற்றி வருவதால், இன்னும் நான் முதல்-மந்திரி போல தான் உணருகிறேன். என் மீதான மக்களின் அன்பும், பாசமும் குறையவில்லை. ஒருவரின் பதவியை விட அவரது வேலை தான் முக்கியம். நான் வீட்டில் சும்மா உட்கார்ந்துவிடவில்லை. நான் மக்களுக்கு சேவையாற்றுகிறேன். எதிர்க்கட்சி தலைவராக நன்றாக பணியாற்றுகிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.