தேசிய செய்திகள்

சமீர் வான்கடே தந்தை தொடர்ந்தமந்திரி நவாப் மாலிக்கிற்கு எதிரான வழக்கில் 22-ந் தேதி தீர்ப்பு + "||" + Judgment in the case against Minister Nawab Malik on the 22nd

சமீர் வான்கடே தந்தை தொடர்ந்தமந்திரி நவாப் மாலிக்கிற்கு எதிரான வழக்கில் 22-ந் தேதி தீர்ப்பு

சமீர் வான்கடே தந்தை தொடர்ந்தமந்திரி நவாப் மாலிக்கிற்கு எதிரான வழக்கில் 22-ந் தேதி தீர்ப்பு
மந்திரி நவாப் மாலிக்கிற்கு எதிராக சமீர்வான்கடேவின் தந்தை தொடர்ந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
மும்பை, 
மந்திரி நவாப் மாலிக்கிற்கு எதிராக சமீர்வான்கடேவின் தந்தை தொடர்ந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
மானநஷ்ட வழக்கு
போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக இஸ்லாமியரான சமீர் வான்கடே போலி சான்றிதழ் மூலம் தாழ்த்தப்பட்டவர் என கூறி அரசு வேலையில் சேர்ந்ததாக கூறினார். இதேபோல சமீர் வான்கடேவின் பெயர் சமீர் தாவூத் வான்கடே என்றும், அவரது தந்தை தியான்தேவ் வான்கடேவின் பெயர் தாவூத் வான்கடே என்றும் கூறியிருந்தார்.
 இந்த விவகாரத்தில் சமீர் வான்கடேவின் தந்தை தியான்தேவ் வான்கடே மும்பை ஐகோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் நவாப் மாலிக் சமீர் வான்கடே, குடும்பத்தினர் பற்றி சமூகவலைதளத்தில் கருத்துகளை வெளியிடவும் தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
22-ந் தேதி உத்தரவு
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி மாதவ் ஜாத்தார் அமர்வு முன் நடந்தது. அப்போது தியான்தேவ் வான்கடே, சமீர் வான்கடே இந்து எஸ்.சி. தான் என்பதற்கான பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்தார். 
இதேபோல மந்திரி நவாப் மாலிக் தரப்பில், சமீர் வான்கடே பிறப்பால் முஸ்லிம் தான் என்பதற்கான பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்தது. இதையடுத்து ஐகோர்ட்டு இந்த வழக்கில் தனது தீர்ப்பை வருகிற 22-ந் பிறப்பிக்க போவதாக அறிவித்தது. 
மேலும் அதுவரை 2 தரப்பினர் இதுதொடர்பான எந்த புதிய ஆவணங்களையும் வெளியிட கூடாது என உத்தரவிட்டுள்ளது.