தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசம், பஞ்சாப்தேர்தலை கருத்தில் கொண்டே வேளாண் சட்டங்கள் வாபஸ்சரத்பவார் கருத்து + "||" + Sharad Pawar said Centre decided to repeal farm laws with eye on polls

உத்தரப்பிரதேசம், பஞ்சாப்தேர்தலை கருத்தில் கொண்டே வேளாண் சட்டங்கள் வாபஸ்சரத்பவார் கருத்து

உத்தரப்பிரதேசம், பஞ்சாப்தேர்தலை கருத்தில் கொண்டே வேளாண் சட்டங்கள் வாபஸ்சரத்பவார் கருத்து
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் தேர்தலை கருத்தில் கொண்டே வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக சரத்பவார் கருத்து தெரிவித்து உள்ளார்.
மும்பை, 
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் தேர்தலை கருத்தில் கொண்டே வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக சரத்பவார் கருத்து தெரிவித்து உள்ளார். 
வாபஸ் அறிவிப்பு
சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அதிரடியாக அறிவித்தார். பிரதமரின் அறிவிப்புக்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதேபோல முன்னாள் வேளாண் துறை மத்திய மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவருமான சரத்பவார் இது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2 நாட்கள் கூட்டம்
நான் 10 ஆண்டுகள் வேளாண்துறை மத்திய மந்திரியாக இருந்தபோது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜனதாவால் விவசாய சட்டம் குறித்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. 
அப்போது நான் விவசாயம் என்பது மாநில அரசுடன் தொடர்புடையது. எனவே மாநில அரசுகளுடன் கலந்துரையாடாமல், அவர்களின் அனுமதி இல்லாமல் எந்த முடிவை எடுக்கவும் விருப்பமில்லை என்பதை தெளிவுபடுத்தினேன்.
இதேபோல வேளாண் சட்டங்களை உருவாக்க அனைத்து மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள் மற்றும் முதல்-மந்திரிகளுடன் தனிப்பட்ட முறையில் 2 நாட்கள் கூட்டம் நடத்தி, அவர்களுடன் விரிவாக விவாதித்து, அவர்கள் கொடுத்த ஆலோசனைகளை குறித்துக்கொண்டேன். 
அதேபோல, நாட்டிலுள்ள விவசாய பல்கலைக்கழகங்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டன. சில விவசாய அமைப்புகளிடம் இருந்து நாங்கள் விவசாய சட்டங்களை உருவாக்கும் செயல்முறையை தொடங்க இருந்தோம். 
ஓராண்டு போராட்டம்
ஆனால் எங்கள் அரசின் பதவிக்காலம் அதற்குள் முடிவடைந்து புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. இந்தநிலையில் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அரசு விவாதம் இல்லாமல், மாநில அரசிகளின் கருத்துகளை எடுத்துக்கொள்ளாமல் 3 வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. 
இதை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இறுதியில் உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குறிப்பாக அரியானா, பஞ்சாப் மற்றும் வேறு சில மாநிலங்களின் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் எதிர்வினையை பார்த்த பா.ஜனதாவினர் வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு 3 வேளாண் சட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தனர்.
நடந்தது நல்லதுதான் என்றாலும், விவசாயிகள் ஓராண்டு காலம் போராட வேண்டிய சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கி இருப்பதை நாம் மறந்துவிட முடியாது. 
இவ்வாறு அவர் கூறினார்.