மாநில செய்திகள்

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை கைது செய்ய இடைக்கால தடை + "||" + To arrest former Mumbai Police Commissioner Parambir Singh Interim ban

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை கைது செய்ய இடைக்கால தடை

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை கைது செய்ய இடைக்கால தடை
மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை 6 வழக்குகளில் கைது செய்ய மராட்டிய போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை, 

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை 6 வழக்குகளில் கைது செய்ய மராட்டிய போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மந்திரி பதவியிழப்பு 

மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்ட சம்பவமும், அந்த காரின் உரிமையாளர் ஹிரன் மன்சுக் கொலை வழக்கும் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணையை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக அப்போதைய மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார். 
இதையடுத்து அவர் அப்போது மாநில உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மீது மாதம் ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறினார். இந்த குற்றச்சாட்டு மூலம் அனில் தேஷ்முக் மந்திரி பதவியை இழக்க நேரிட்டது.
 
சுப்ரீம் கோர்ட்டில் மனு

இதையடுத்து தற்போது ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் பரம்பீர் சிங் மீது மிரட்டி பணம் பறிப்பு, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்குகளால் நெருக்கடியை சந்தித்த பரம்பீர் சிங் தலைமறைவானார். அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டதாகவும் கூறப்பட்டது. அவரை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாகவும் சமீபத்தில் மும்பை ஐகோர்ட்டு அறிவித்தது. 
இந்தநிலையில் மராட்டியத்தில் தனக்கு எதிராக எப்.ஐ.ஆர். போடப்பட்ட 6 வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க உத்தரவிடக்கோரி, பரம்பீர் சிங் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது பரம்பீர் சிங் தற்போது எங்கு உள்ளார் என்பதை தெரிவிக்கும்படியும், அதன் பிறகு நிவாரணம் கோரும்படியும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

இடைக்கால தடை 

இது தொடர்பாக பரம்பீர் சிங் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் புனித் பாலி, மனுதாரர் இந்தியாவில் தான் உள்ளார் என்றும், மராட்டியத்துக்கு சென்றால் மும்பை போலீசாரால் மனுதாரர் உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், சி.பி.ஐ. அல்லது கோர்ட்டு சம்மன் அளிக்கும் பட்சத்தில் அங்கு ஆஜராக மனுதாரர் தயாராக இருப்பதாகவும் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை கண்டு அஞ்சினால்,  சாமானியர்கள் நிலை என்னவாகும்? என வியப்புடன் கேட்டனர், 

மேலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருமாறு பரம்பீர் சிங்குக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மராட்டிய போலீசார் தொடர்ந்துள்ள வழக்குகளில் பரம்பீர் சிங்கை கைது செய்ய கூடாது என்றும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.