தேசிய செய்திகள்

சீக்கியர்கள் குறித்து சர்ச்சை கருத்துநடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார் + "||" + Sikh body submits complaint against Kangana

சீக்கியர்கள் குறித்து சர்ச்சை கருத்துநடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்

சீக்கியர்கள் குறித்து சர்ச்சை கருத்துநடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்
சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை, 
சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை கருத்து
நடிகை கங்கனா ரணாவத் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார். இதற்காக அவரது டுவிட்டர் கணக்கு கடந்த மே மாதம் முடக்கப்பட்டது. தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் கருத்துகளை கூறி வருகிறார். 
இந்தநிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், நாட்டுக்கு 2014-ல் தான் சுதந்திரம் கிடைத்தது என்றார். மேலும் அவர் 1947-ல் நாட்டுக்கு கிடைத்தது சுதந்திரம் இல்லை, பிச்சை தான் எனவும் தெரிவித்தார். நடிகை கங்கனா ரணாவத்தின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது குறித்து நடிகை கங்கனா ரணாவத் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்தாா். அதில், அவர் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, சீக்கியர்களை அவரது காலணியில் போட்டு நசுக்கினார் எனவும் மறைமுகமாக தெரிவித்து இருந்தார்.
போலீசில் புகார்
இந்தநிலையில் சீக்கியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது சீக்கிய அமைப்பினர் மும்பை போலீசில் புகார் அளித்து உள்ளனர். 
இதுதொடர்பாக டெல்லி சீக்கிய குருத்துவாரா மேலாண்மை கமிட்டி தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா தலைமையில் அதன் பிரதிநிதிகள் கார் போலீஸ் நிலைய அதிகாரியிடம் புகார் மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், "நடிகை கங்கனா ரணாவத் வேண்டும் என்றே விவசாயிகளின் போராட்டத்தை ‘காலிஸ்தானி இயக்கம்' என கூறியுள்ளார். சீக்கியர்களை காலிஸ்தானி பயங்கரவாதிகள் என குறிப்பிட்டுள்ளார். இந்திரா காந்தி சீக்கியர்களை அவரது காலணியில் போட்டு நசுக்கினார் என கங்கனா ரணாவத் சீக்கியர்களுக்கு எதிராக மிகவும் அவதூறாக, இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு இழிவானது, அவமரியாதையானது. இது உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது. எனவே கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அவர் வருங்காலங்களில் சீக்கியர்களுக்கு எதிராக இதுபோன்ற தீய கருத்துகளை கூறமாட்டார்" என கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக சீக்கிய பிரதிநிதிகள் மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் கர்னிக்கை சந்தித்து பேசினர்.