மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 44,388 பேருக்கு கொரோனா + "||" + Corona for 44388 people in Maharashtra

மராட்டியத்தில் புதிதாக 44,388 பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் புதிதாக 44,388 பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் புதிதாக 44 ஆயிரத்து 388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை, 

மராட்டியத்தில் புதிதாக 44 ஆயிரத்து 388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 207 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில்  புதிதாக 44 ஆயிரத்து 388 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தொடா்ந்து பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதேபோல மேலும் 12 பேர் வைரஸ் நோய்க்கு பலியானார்கள். தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 259 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் இதுவரை 69 லட்சத்து 20 ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 65 லட்சத்து 72 ஆயிரத்து 432 பேர் குணமடைந்து உள்ளனர். 1 லட்சத்து 41 ஆயிரத்து 639 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தலைநகர் மும்பையில் புதிதாக 19 ஆயிரத்து 474 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 7 பேர் பலியானார்கள். நகரில் இதுவரை 9 லட்சத்து 14 ஆயிரத்து 572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 406 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மாநிலத்தில் ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதில் 207 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சாங்கியில் 57 பேருக்கும், மும்பையில் 40 பேருக்கும், புனேயில் 22 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது.
 மாநிலத்தில் இதுவரை 1,216 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 454 பேர் குணமாகி உள்ளனர்.