ரூ.28 லட்சம் நகைகள் கொள்ளை அடித்த வாலிபர் கைது

குர்லா நகைக்கடையில் ரூ.28 லட்சம் நகைகளை கொள்ளை அடித்த வாலிபரை போலீசார் ரெயில் நிலையத்தில் வைத்து மடக்கி பிடித்தனர்.
மும்பை,
குர்லா நகைக்கடையில் ரூ.28 லட்சம் நகைகளை கொள்ளை அடித்த வாலிபரை போலீசார் ரெயில் நிலையத்தில் வைத்து மடக்கி பிடித்தனர்.
வாலிபர் பிடிபட்டார்
புஷாவல் பகுதியில் உள்ள கண்ட்வா ரெயில் நிலையத்தில் நேற்று சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் கையில் பையுடன் நடந்து சென்றதை ரெயில்வே போலீசார் கண்டனர். அவரை பிடித்து பையில் சோதனை போட்டனர். இதில் துணியில் அதிகளவில் தங்கநகைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டனர். இது குறித்து போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மும்பை குர்லாவில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது தெரியவந்தது.
நகைகள் கொள்ளை
மேலும் அவர் கொல்கத்தாவை சேர்ந்த சுதாம் நிமாய் (வயது31) என்பது தெரியவந்தது. இவர் மும்பை குர்லாவில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வந்து உள்ளார். உரிமையாளர் மாத சம்பளம் தராததால் கடையில் இருந்த ரூ.28 லட்சம் நகைகளை கொள்ளை அடித்துவிட்டு சொந்த ஊருக்கு ரெயிலில் தப்பிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மும்பை போலீசார் அங்கு விரைந்து சென்று பிடிபட்ட வாலிபரை விசாரணைக்காக மும்பை அழைத்து வந்தனர்.






