கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்த 3 பேர் கைது

கடை உரிமையாளரை கடத்தி கழுத்தை நெரித்து கொலை செய்த ஊழியர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
தானே,
கடை உரிமையாளரை கடத்தி கழுத்தை நெரித்து கொலை செய்த ஊழியர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
உரிமையாளர் கொலை
தானே மாவட்டம் டிட்வாலா பகுதியை சேர்ந்தவர் சச்சின் மானே (வயது46). இவர் சோலார் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். ஊழியர் ஒருவர் ஒழுங்கற்ற முறையில் வேலை பார்த்தததால் அவரை உரிமையாளர் சச்சின் மானே கண்டித்து உள்ளார். இதனால் முன்விரோதம் கொண்ட ஊழியர் கடந்த 6-ந் தேதி வியாபார விஷயமாக உரிமையாளரை தகானு பகுதிக்கு காரில் அழைத்து சென்றார்.
அங்கு சென்றவுடன் ஊழியரின் கூட்டாளிகளான 22 முதல் 25 வயதுக்கு உட்பட்ட 2 பேர் காரில் ஏறிக்கொண்டனர். பின்னர் காட்டு பகுதிக்கு கடத்தி சென்றனர். அங்கு சச்சின் மானேவை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை காட்டில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.
3 பேர் கைது
இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் கடந்த 8-ந்தேதி முதல் சச்சின் மானேவை தேடிவந்தனர். இந்த நிலையில் தகானு காட்டுப்பகுதியில் கேட்பாரற்று கார் ஒன்று நிற்பதாக தெரியவந்தது. அங்கு சென்று காரை மீட்டனர். அதன் அருகே சச்சின் மானேவின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டனர்.
இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலையில் ஈடுபட்ட ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விாரணை நடத்தி வருகின்றனர்.






