மாயமான 3 சிறுமிகள் மீட்பு


மாயமான 3 சிறுமிகள் மீட்பு
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

மும்பை தகிசரை சேர்ந்த 10, 7 மற்றும் 5 வயதுயுடைய 3 சிறுமிகள் கடந்த 29-ந்தேதி இரவு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். வெகுநேரமாகியும் வீடு திரும்பாதால் பெற்றோர் தேடினர். எங்கும் கிடைக்காமல் போனதால் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் காணாமல் போன 3 சிறுமிகள் ரெயில் ஏறி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதனால் மிராபயந்தர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் பயந்தர் மேற்கு பகுதியில் 3 சிறுமிகள் அங்குமிங்குமாக நடமாடி வருவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று 3 சிறுமிகளை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது கண்காட்சியை பார்வையிட 3 பேரும் வீட்டில் இருந்து பெற்றோருக்கு தெரிவிக்காமல் சென்றதும், அங்கு சென்ற அவர்களுக்கு வீடு திரும்பி வர வழி தெரியவில்லை எனவும் தெரியவந்தது. இதனால் ரெயில் ஏறி பயந்தருக்கு சென்று உணவுக்காக அலைந்து திரிந்தது தெரியவந்தது.

சம்பவம் நடந்து 10 மணி நேரத்தில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமிகளை மீட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story