சோலாப்பூரில் லாரி மீது கார் மோதல்: குழந்தை உள்பட 3 பேர் பலி


சோலாப்பூரில் லாரி மீது கார் மோதல்: குழந்தை உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:15:52+05:30)

புனே,

சோலாப்பூர் மாவட்டம் அக்கல்கோட் தாலுகா சிர்ராசி கிராமம் அருகே சரக்கு லாரி ஒன்று சிர்சாய் சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான குழந்தை உள்பட 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இண்டியில் இருந்து கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ஆலந்த் என்ற பகுதிக்கு கார் சென்ற போது விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.


Next Story