நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது


நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது
x

பொது இடத்தில் பெண்ணை தாக்கிய நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை காமாட்டிபுரா பகுதியில் உள்ள கடை முன்பு நவநிர்மாண் சேனா கட்சியின் விளம்பர பதாகை வைக்க கம்பம் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவர் விளம்பர பதாகையை கண்டு தனது ஆட்சேபனையை தெரிவித்தார். இது பற்றி அறிந்த கட்சி பிரமுகர் வினோத் மற்றும் கட்சி தொண்டர்கள் சேர்ந்து அப்பெண்ணிடம் தகராறு செய்தனர். பொது இடத்தில் பெண்ணை கீழே தள்ளி விட்டு கன்னத்தில் அறைந்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.

இது பற்றி அறிந்த நாக்பாடா போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பெண்ணை தாக்கியவர்கள் வினோத், அவரது ஆதரவாளர்கள் ராஜூ அர்கில், சதீஷ் லாட் ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். கட்சி தலைவர் பற்றி தவறாக பேசியதால் தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர். பொது இடத்தில் பெண்ணை தாக்கிய சம்பவம் கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கவனத்திற்கு சென்றது. இதையடுத்து பெண்ணை தாக்கிய வினோத்தை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அவர் அறிவித்தார்.

1 More update

Next Story