பெண்ணை கொன்று சாக்கடை கால்வாயில் வீசிய அக்காள், தங்கை உள்பட 3 பேர் கைது

கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் பெண்ணை கொலை செய்து உடலை சாக்கடை கால்வாயில் வீசிய அக்காள், தங்கை உள்பட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் பெண்ணை கொலை செய்து உடலை சாக்கடை கால்வாயில் வீசிய அக்காள், தங்கை உள்பட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணின் உடல் மீட்பு
மும்பை குர்லா கிழக்கு நேருநகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பையை மீட்டு சோதனையிட்டனர். இதில் பெண்ணின் உடல் கிடந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் அப்பெண் கொலை செய்யப்பட்டு உடல் கால்வாயில் வீசப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர்.
கள்ளத்தொடர்பு
இதில் கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கும் அதே பகுதியை சேர்ந்த மினல் பவார்(வயது25) என்ற பெண்ணிற்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மினல் பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரும் மேலும் 2 பெண்களும் சேர்ந்து இந்த கொலையை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது.
அபர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கும், தனது கணவருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளதாக மினல்பவார் சந்தேகப்பட்டுள்ளனர். எனவே அந்த பெண்னை கொலை செய்ய திட்டமிட்ட மினல் பவார் தனது சகோதரி சில்பா, தோழி பிரக்யா பாலேராவ் ஆகியோரின் உதவியை நாடினார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து கடந்த 1-ந்தேதி அப்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை பையில் போட்டு சாக்கடை கால்வாயில் வீசி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சில்பா, பிரக்யா பாலேராவ் ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






