மும்பையில் 330 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் - பெஸ்ட் தகவல்


மும்பையில் 330 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் - பெஸ்ட் தகவல்
x

மும்பையில் 330 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என பெஸ்ட் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் 330 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என பெஸ்ட் தெரிவித்து உள்ளது.

330 சார்ஜிங் மையங்கள்

பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. எனவே பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளன. இந்தநிலையில் மும்பையில் 330 பொது சார்ஜிங் மையங்கள் அமைக்க பெஸ்ட் திட்டமிட்டு உள்ளது.

இந்த சார்ஜிங் மையங்களில் பெஸ்ட் பஸ்கள் மட்டுமின்றி பொது மக்களும் தங்களின் வாகனங்களை சார்ஜிங் செய்து கொள்ள முடியும். மாநில கனரக தொழில்துறை செயலாளர் அருண் கோயல் நேற்று பெஸ்ட் நிர்வாகத்தின் இ-பஸ் திட்டத்தை ஆய்வு செய்தார். இந்தநிலையில் மும்பையில் 330 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ள தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

6 மாதங்களில்..

இதுகுறித்து பெஸ்ட் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா கூறுகையில், " நகரில் உள்ள 27 பஸ் டெப்போவிலும் தலா 6 சார்ஜிங் மையங்கள் வைக்கப்பட உள்ளது. இதுதவிர எங்களது பஸ் நிலையம் உள்ளிட்ட 55 இடங்களில் சார்ஜிங் மையங்களை வைக்க திட்டமிட்டு உள்ளோம். பொது மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த மையங்கள் அமைக்கப்படுகிறது. சார்ஜிங் மையங்கள் 6 மாதங்களில் அமைக்கப்படும் " என்றாா்.


Next Story