போலி தங்க காசுகளை கொடுத்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற 4 பேர் கைது


போலி தங்க காசுகளை கொடுத்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற 4 பேர் கைது
x

பால்கர் மாவட்டம் வசாய் வாலிவ் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் போலி தங்க காசுகளை கொடுத்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற 4 பேர் கைது

வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் வாலிவ் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி கும்பல் போலி தங்ககாசுகளை கொடுத்து ரூ.12 லட்சத்தை பறித்து சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை பிடிக்க விசாரணை நடத்தினர். இதில் 5 பேரின் அடையாளம் தெரியவந்தது. மேலும் அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

தனிப்படை போலீசார் அங்கு சென்று விஷால் தர்மராய் (வயது19), சஞ்சு ராய் (27), சிவ்ராம் மாலி (57), மீனா சோலங்கி (45) ஆகிய 4 பேரை பிடித்து கைது செய்தனர். இவர்கள் பாதிக்கப்பட்டவரிடம் புதையலில் கிடைத்த தங்ககாசுகள் என கூறி மஞ்சள் நிற வர்ணம் பூசிய போலி தங்ககாசுகளை கொடுத்து ஏமாற்றி பணம் பறித்து சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 கிலோ எடையுள்ள போலி தங்ககாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story