கொலாபாவில் ரூ.1.41 கோடி போதைப்பொருளுடன் 4 பேர் கைது


கொலாபாவில் ரூ.1.41 கோடி போதைப்பொருளுடன் 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 Sept 2023 1:15 AM IST (Updated: 16 Sept 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

கொலாபாவில் ரூ.1.41 கோடி போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்

மும்பை,

தென்மும்பை கொலாபா பகுதியில் நேற்று போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் சந்தேகம் படும்படி நடமாடியதை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த மெபட்ரோன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த கொலாபாவில் பதுங்கி இருந்த ஒருவரும், டோங்கிரியில் பதுங்கி இருந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட 4 பேரிடம் இருந்து மொத்தம் 705 மெபட்ரோன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 41 லட்சம் ஆகும். இது குறித்து ஆசாத் மைதான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story