லிப்ட்டில் சிக்கிய 4 பெண்கள் மீட்பு


லிப்ட்டில் சிக்கிய 4 பெண்கள் மீட்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:16+05:30)

பால்கர்,

பால்கர் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தில் செல்ல பயணிகளின் வசதிக்காக லிப்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த லிப்ட்டில் நேற்று 4 பெண் பயணிகள் உள்ளே சென்றனர். லிப்ட் மேலே சென்ற போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு நடுவழியில் நின்றது. மேலும் லிப்டில் இருந்த மின்விளக்கு, மின்விசிறி செயல் இழந்ததால் உள்ளே இருந்த 4 பெண்கள் பீதி அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டதால் தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்தனர்.

லிப்டில் சிக்கிய 4 பெண் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதன்பிறகு பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தினால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story