தானேயில் பெய்த கனமழையால் 4 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான்- வீடு இடிந்து 2 பேர் காயம்


தானேயில் பெய்த கனமழையால் 4 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான்- வீடு இடிந்து 2 பேர் காயம்
x

தானேயில் பெய்த கனமழையால் 4 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். மேலும் வீடு இடிந்து 2 பேர் காயமடைந்தனர்.

தானே,

தானேயில் பெய்த கனமழையால் 4 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். மேலும் வீடு இடிந்து 2 பேர் காயமடைந்தனர்.

கனமழை

தானேயில் கடந்த சில தினங்களுக்கு 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தானே மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.

கல்வா பாஸ்கர் நகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதியில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கியது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

சிறுவன் மூழ்கினான்

அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆதித்யா மவுரியா தண்ணீரில் விளையாடிய போது வெள்ளநீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டான். தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் நேற்று முன்தினம் இரவு வரையில் சிறுவனை மீட்கமுடியாமல் போனதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில் வாக்ளே எஸ்டேட் வர்கடே சால் பகுதியில் உள்ள வீடு இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக விட்டாவா போலீஸ் சவுக்கி, லோக்மான்யா திலக் நர்சிங் ஹோம், ராஜ்லஷ்மி சால், தானே ரெயில் நிலையம், தாதாபாட்டீல் வாடி, ராஜ்தர்சன் சொசைட்டி, கோல்பாடில் உள்ள சித்தேஷ்வர் டவர் ஆகிய இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்பட்டது.


Next Story