மும்பையில் 400 கிலோ கலப்பட நெய் பறிமுதல்


மும்பையில் 400 கிலோ கலப்பட நெய் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிஞ்ச்பந்தர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 400 கிலோ கலப்பட நெய்யை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மும்பை,

சிஞ்ச்பந்தர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 400 கிலோ கலப்பட நெய்யை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆய்வக பரிசோதனை

தீபாவளி பண்டிகையையொட்டி கலப்படம் செய்யப்பட்ட உணவுகள் அதிகளவில் சந்தையில் வலம் வருகிறது. இதனை தடுக்கும் வகையில் உணவு தரத்தை ஆய்வு செய்யும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் மும்பையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மும்பை சி.எஸ்.எம்.டி. அருகே சிஞ்ச்பந்தர் பகுதியில் உள்ள கட்டிடத்தில் உள்ள குடோன் ஒன்றில் தீபாவளி பலகாரம் தயாரிக்க கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தீவிர சோதனை

இதன் பேரில் அங்கு விரைந்த அதிகாரிகள் அங்கிருந்த 400 கிலோ கலப்பட நெய்யை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். ஆய்வக பரிசோதனைக்கு பிறகு கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து இணை கமிஷனர் சசிகாந்த் கேக்ரே கூறுகையில், "பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தீபாவளி பண்டிகை கொண்டாட உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

1 More update

Next Story