உத்தவ் தாக்கரே அரசு கடைசி நேரத்தில் பிறப்பித்த 400 உத்தரவுகள் ஆய்வு செய்யப்படும்- பட்னாவிஸ் தகவல்


உத்தவ் தாக்கரே அரசு கடைசி நேரத்தில் பிறப்பித்த 400 உத்தரவுகள் ஆய்வு செய்யப்படும்- பட்னாவிஸ் தகவல்
x

உத்தவ் தாக்கரே அரசு கடைசி நேரத்தில் பிறப்பித்த 400 உத்தரவுகள் ஆய்வு செய்யப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

உத்தவ் தாக்கரே அரசு கடைசி நேரத்தில் பிறப்பித்த 400 உத்தரவுகள் ஆய்வு செய்யப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

400 உத்தரவுகள் ஆய்வு

ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் 20-ந் தேதி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக திரும்பினார். இதையடுத்து உத்தவ் தாக்கரே அரசு கவிழ்வது உறுதியானது. இந்தநிலையில் 20-ந் தேதிக்கு பிறகு மாநில அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக அவசரமாக உத்தரவுகளை பிறப்பித்தது. இந்தநிலையில் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்து, 30-ந் தேதி பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியானார்.

இந்தநிலையில் உத்தவ் தாக்கரே அரசு கடைசி நேரத்தில் பிறப்பித்த 400 உத்தரவுகள் ஆய்வு செய்யப்படும் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கடந்த உத்தவ் தாக்கரே அரசு ஆட்சி கவிழும் நேரத்தில், 400 உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. அப்போது திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வழக்கமான பட்ஜெட்டை விட 5 மடங்கு அதிகம் ஆகும். எனவே அந்த உத்தரவுகளை செயல்படுத்தினால் அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமை ஏற்படும். தேவை அடிப்படையில் முந்தைய அரசின் உத்தரவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்." என்றார்.

அஜித்பவாா் வேண்டுகோள்

இந்தநிலையில் முந்தைய அரசின் உத்தரவுகளை ரத்து செய்வதால், பல வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கூறியுள்ளார்.

அவர் முந்தைய அரசின் அனைத்து உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டாம் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை கேட்டு கொண்டு உள்ளார்.

1 More update

Next Story