சீட்பெல்ட் அணியாத 44 ஆயிரம் பேருக்கு அபராதம்


சீட்பெல்ட் அணியாத 44 ஆயிரம் பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

மும்பை,

மும்பையில் கடந்த 1-ந் தேதி முதல் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி 4 சக்கர வாகனங்களில் பின் சீட்டில் உள்ள பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணியாத டிரைவர், பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என போலீசார் கூறியிருந்தனர்.

மும்பை போலீசாரின் இந்த உத்தரவுக்கு டாக்சி டிரைவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி முதல் மும்பையில் போலீசார் சீட் பெல்ட் அணியாத 44 ஆயிரம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து உள்ளனர். இதில் 22 ஆயிரத்து 970 பேர் சீட்பெல்ட் அணியாமல் சென்ற டிரைவர்கள் ஆவர். 20 ஆயிரத்து 719 பேர் பயணிகள்.

இதேபோல அதிகபட்சமாக கிழக்கு புறநகரில் சீட் பெல்ட் அணியாத 10 ஆயிரத்து 500 டிரைவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து உள்ளனர். மேற்கு புறநகரில் 6 ஆயிரம் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story