ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்

வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை,
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து நேற்று மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சியாரா லியோனன் என்ற பெண் பயணியின் பையை சோதனை செய்த போது, அதில் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 500 கிராம் கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பெண் பயணியை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையின் அந்த பெண் பணத்துக்காக போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. பெண் போதைப்பொருளை யாருக்காக மும்பைக்கு கடத்தி வந்தார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






