போலி ஆவணம் தயாரித்து நில மோசடி- சோட்டா சகீலின் உறவினர் உள்பட 5 பேர் கைது

போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த சோட்டா சகீலின் உறவினர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த சோட்டா சகீலின் உறவினர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் புகார்
ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தென்மும்பையில் உள்ள தனக்கு சொந்தமான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் பறித்து உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் சோட்டா சகீல் உறவினர் உள்பட 5 பேர் நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு மிரட்டி பணம் பறிப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது.
5 பேர் கைது
இதன்படி போலீசார் விசாரணை நடத்தியதில் சோட்டா சகீலில் மைத்துனர் சலீம் குரோஷி, முஸ்லிம் அஸ்கரலி (வயது62), சேகாஜ்தா கான் (63), அஸ்லம் பட்னி (56), ரிஸ்வான் சேக் (35) ஆகியோர் இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து உள்ளனர். இதன்பின்னர் அந்த ஆவணங்கள் அடிப்படையில் தங்களுக்கு விற்றதாக பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மோசடி சொத்தின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.
ஏற்கனவே சலீம் குரோஷி மற்றொரு வழக்கில் தலோஜா சிறையில் இருந்து வருவதால் மோசடியில் ஈடுபட்ட மற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






