மும்பையில் செல்போன் திருட்டு கும்பலை சேர்ந்த 7 பேர் கைது

மும்பையில் செல்போன் திருட்டு கும்பலை சேர்ந்த 7 பேர் கைது
x

மும்பையில் செல்போன் திருட்டு கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஐபோன்கள் உள்பட 78 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மும்பை,

மும்பையில் செல்போன் திருட்டு கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஐபோன்கள் உள்பட 78 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

செல்போன் திருட்டு

மும்பை மான்கூர்டு பகுதியில் வசிக்கும் ஒருவரின் செல்போன் திருட்டு போனது. இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், செல்போன் திருடிய நபரின் அடையாளம் தெரியவந்தது. அவரை நேற்று போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் 21 ஐபோன்கள் உள்பட 32 செல்போன்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேர் போலீசில் சிக்கினர்.

7 பேர் கைது

அவர்களிடம் இருந்து 4 ஐபோன்கள் உள்பட 46 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மொத்தம் 7 பேரை கைது செய்தனர். இவர்கள் செல்போனை திருடி தரகர்கள் மூலமாக உத்தரபிரதேசம், கொல்கத்தா, நேபாளம் ஆகிய இடங்களில் விற்று பணம் சம்பாதித்து வந்தனர். இவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 27-ந்தேதி வரை தங்களது காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story